Posts

சமூக மேம்பாட்டில் உயிர்களின் விரயம்!!

         மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் தமது சமூக மேம்பாட்டிற்கான போராட்டங்களில் வெற்றிக்கான வழிமுறைகளாகப் பெரும்பாலும் மனப்பான்மைகளில் பலவீனமானவைகளே அடக்குமுறைகளை மேற்கொள்கின்றன.         ஆயினும்  அன்பின் அடிப்படையில் வீரியமிகு நிலையான நேர்நிலை பாதிப்புகளை மேற்கொண்டோர்கள் தான்  சாதித்திருக்கின்றனர் என்பதே வரலாற்றின் வழிநெடுகே காணமுடிகிறது!        அதிலும் தமது கொள்கைக்களுக்காக மீட்டெடுக்கவியலா தம் உயிரையே மேம்பட்ட அவ்வெற்றிக்காக   செலவிடுவதுதான் சீரணிக்கவியலா தன்மையோடு மனித மனங்களில் ஆழப்பதிந்து தம் கருத்தை உறுதிபடுத்தும் ஆயுதங்களாகின்றன.         அவ்வழியில் கிறித்தவத்தின் துவக்கமும் முடிவில்லா தொடர்ச்சியும்  அன்பிற்கே உரிய அடிப்படை பரிமாணங்களால் தான் வென்று நிற்கின்றன என்பது உலகளாவிய ஏற்பு நிலை!         உலகில் மனிதச்  சமூகத்தில் அதன் முன்னேற்றப் பாதைகளில் நடைபெற்றுள்ள புரட்சிப் போராட்டங்களும் நியாயமான விடுதலை வேட்கைகளும் கூட மனித உயிர்களை விழுங்கி கொண...

சும்மாவா கிடைத்தது வாக்குரிமை!!??

Image
21:3:2021_ *இந்து தமிழ்* நாளிதழில் எனது கட்டுரை

சமூகச் சீரமைப்பில் சமயங்கள்

               உலகில் வெகுசன வெகுசன  முன்னணி சமயமான கிறித்தவம் மனிதகுலத்திற்கு நல்கிய ஆற்றல் மற்றும் பண்பாட்டுத் தாக்கங்கள் அளப்பரியது.        ஆரம்பத்தில் மனிதனின் நம்பிக்கைகளையும் மனோபாவங்களையும் திடப்படுத்த உதவிய நெறிமுறைகளற்ற சமய நம்பிக்கைகள் பின்னர் மனிதன் தனது  சாதி, சமூக, பொருளாதார  செல்வாக்கை வெளிப்படுத்தும் மதிப்பீட்டு நிறுவனங்களாகி நின்றன.      மதங்களின் கொள்கைகளும் பின்பற்றும் வழிமுறைகளும் அந்தந்த சமூகத்தளங்களின் ஆதிக்க நிலையிலிருந்தோரின் வடிவமைப்புகளுக்கேற்ப வளைந்து கொடுக்கத்தக்கதாகவே மாறிப் போயிருந்தன.        இந்நிலைப்பாடு அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் வாழ்க்கை முறைகளைக் கடினமாக்கியது.  காலப் போக்கில் சமயங்களில் ஏற்படுத்தப்பட்ட பக்தியின் வெளிப்பாட்டு முறைகளாக பல்வேறு சமயச் சடங்குகளினால் மக்கள் அல்லலுற்று புலம்பும் நிலையேற்பட்டது.         இந்நிலைப்பாடு உலகளாவிய நிலையாகவே மனிதச் சமூகத்தில் இருந்தும்...

மாடும் வண்டியும்

Image
எனது *மாடும் வண்டியும்* என்ற இந்நூல் நமது  பயன்பாட்டிலிருந்து மறைந்து வரும் மாட்டு வண்டிகளின் தோற்றம் முதல் அதன் இன்றைய நிலை வரை விவரிக்கிறது. *மாட்டுவண்டிகளின் தோற்றம்* ,அதன்,  *படிப்படியான  வளர்ச்சிநிலை,*  *வண்டிகளின் செய்முறை,*  *மாட்டுவண்டியோடு இணைந்த மக்களின் வாழ்கை முறை* *நமது நாகரீக வளர்ச்சிப் பாதையில் மாட்டு வண்டிகளின் பங்கு*   போன்றனவற்றை  *கள ஆய்வின்* மூலம் சுவாரஸ்யமான விதத்தில் எடுத்துரைத்திருக்கிறேன்.  இதற்காக இத்தகைய வண்டிகள் செய்து வந்த ஆசாரிகளை நேரில் சந்தித்து நேர்காணல் செய்து அவர்களது அனுபவங்களை பதிந்திருக்கிறேன்.  மாட்டுவண்டிகள் செய்யும் பட்டறைகளுக்கு நேரில் சென்று புகைப்படங்கள் எடுத்து இணைத்திருக்கிறேன். எழுத்தாளரும் எனது எழுத்துலகக் குருவுமான *ஆ.சிவசுப்பிரமணியன்* அவர்களது முன்னுரை  இந்நூலின் கூடுதல் சிறப்பு. இது ஒரு NCBH நிறுவன வெளியீடு. +918124949491 இந்த எண்ணில் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வாசகர்கள் இதனை வாசித்து நமது அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ள  இந்நூலை இளந்தலைமுறையினருக்கு அறிமு...

சாதீய சமத்துவாக்கத்தில் சமயப் பங்களிப்பு!

      சாதி,சமயச் சடங்குகள் ,மரபுசார் நம்பிக்கைகள், ,கலாச்சாரம் என்ற பெயரில்  மக்களின் மூளைக்கு விலங்கிட்டு சமூகத்தில் ஆங்காங்கே ஒருசிலர் தங்களை மேல்மட்டத்தினராக காண்பிக்கும் ஒரே நோக்கத்தில் அடுத்தடுத்த அடைமைமுறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே வாழ்கையைத் தக்கவைத்துக் கொண்டிருந்த சமூகத் தீமை இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையின் ஆரம்ப காலகட்டம் மிகக் கொடூரமானதாக வரலாற்றுப் பின்புலங்கள் சுட்டி நிற்கின்றன.             அறியாமைகளின் அளவைப்பொறுத்தே ஒரு நாடுஅல்லது சமூகம் புறத்தையார்களின் கொடுக்குப் பிடிக்கு இலக்காகும் தன்மையை தெளிவாக வெளிப்படுத்தும்.  இயற்கை வளமும் சிறந்த கலாச்சார மரபுக்களையும் தாங்கி நின்ற நமது தேசமும் அதன் சிறப்புகளை மக்கள் மற( றை)க்கும் அளவு அறியாமை திரைகளுக்குள் மூழ்கிக்கிடந்தது.           பல இனத்தவரும் மதத்தினரும் ஒன்றிணைந்து வாழ்ந்த கூட்டுச் சமூகத்தில் சொந்த நாட்டினரே ஒருவரையொருவர் சாதி சமய பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த அடிமைத் தனங்களைப் போட்டிப்போட்டு திட்டமிட்ட ஆதிக்...

*பெண்ணின வாக்குரிமை*

         பாலின அசமத்துவம் உலகளாவிய நிலையில் இன்றும் பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. தற்போதைய நிலையைவிட சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருபாலருக்குமிடையேயான  உரிமைகளின் அளவின் இடைவெளிகள்  மிக அதிகமாக இருந்து வந்தது.பெண் ஆணுக்கு எந்த விதத்திலும் குறையாத வகையில் இயற்கைக் கூறுகளுடன் படைக்கப் பட்டிருந்தாலும் சமூக, பொருளாதார ,அரசியல் நிலைப்பாட்டில் பெண்ணிற்கு சமத்துவம் கிடைக்கவில்லை என்பது பெரும் சமூகத் தீங்காகவும் சமூக முன்னேற்றத்தின் தடைக்கல்லாகவும் இருக்கிறது.            மனித வாழ்வியல்முறைகளில் படிப்படியாக ஏற்பட்டு வந்த பல்வேறு மாற்றங்களால் தந்தைவழி முறை உறுதியான பிறகிருந்தே பெண்ணின் உரிமைகள் முடக்கப்பட்டு  ஒதுக்கப்பட்டதோடு பெண் மீதான சமூக மதிப்பீடுகள் குறைந்து போனதை அறிய முடிகிறது.       காலப்போக்கில் ஏற்பட்ட பெண்ணிய இயக்கங்களால் ஓரளவு விழிப்படைந்த பெண் சமூகம் தங்களுக்கான உரிமைகளை ஆண்களுக் கிணையாக அடைந்து செயல்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டன.    அவற்றுள் ஓர் உரிமையே வாக்குரிமை!  ...

பாவை !

Image
       *அடங்கிய ஆசை*       நீலகிரியின் நீலமலை அரசி ஊட்டியென்றால் அதனருகே எழில்மிகுந்த  கோத்தகிரி அழகில்  இளவரசியே தான்..!         பனிமூட்டங்கள் துண்டு துண்டாக கண்ணெதிரே ஊர்ந்து சென்று கொண்டிருக்க, என் சருமத்தை மூடியிருந்த கெட்டியான பனியனையும் தாண்டி உடலை பதம் பார்த்துக்  கொண்டிருந்தது டிசம்பர் மாத குளிர்.      அதிகாலையா  முன்னிரவா என்று கணிக்க முடியாத அளவில் இருட்டிக்கொண்டிருந்தது அன்றைய மதிய வேளை!       கடைவீதியில் எதையும் பொருட்படுத்தாமல் என் வலது கையை பிடித்தபடியே உற்சாக நடை போட்டு ஓட்டமும் குதித்தலுமாகப் புன்னகைப் பொங்க மகிழ்ச்சியில் ஏதேதோ கூறி கொண்டே வந்தாள் எனது ஆறு வயது மகள் ரோசி.   அவளின் குதூகலத்திற்கு ஒரே காரணம் அன்றைய எனது மற்ற வேலைகளை முடிந்து விட்டதால்  கடைசியாக அவளுக்குப் பிடித்தமான  மொம்மைக் கடைக்கு போய் கொண்டு இருப்பது தான்...!!       கடை வந்து விட்டது...    அய்....!!_ என...