மாடும் வண்டியும்
எனது *மாடும் வண்டியும்* என்ற இந்நூல் நமது பயன்பாட்டிலிருந்து மறைந்து வரும் மாட்டு வண்டிகளின் தோற்றம் முதல் அதன் இன்றைய நிலை வரை விவரிக்கிறது. *மாட்டுவண்டிகளின் தோற்றம்* ,அதன், *படிப்படியான வளர்ச்சிநிலை,* *வண்டிகளின் செய்முறை,* *மாட்டுவண்டியோடு இணைந்த மக்களின் வாழ்கை முறை* *நமது நாகரீக வளர்ச்சிப் பாதையில் மாட்டு வண்டிகளின் பங்கு* போன்றனவற்றை *கள ஆய்வின்* மூலம் சுவாரஸ்யமான விதத்தில் எடுத்துரைத்திருக்கிறேன். இதற்காக இத்தகைய வண்டிகள் செய்து வந்த ஆசாரிகளை நேரில் சந்தித்து நேர்காணல் செய்து அவர்களது அனுபவங்களை பதிந்திருக்கிறேன். மாட்டுவண்டிகள் செய்யும் பட்டறைகளுக்கு நேரில் சென்று புகைப்படங்கள் எடுத்து இணைத்திருக்கிறேன். எழுத்தாளரும் எனது எழுத்துலகக் குருவுமான *ஆ.சிவசுப்பிரமணியன்* அவர்களது முன்னுரை இந்நூலின் கூடுதல் சிறப்பு. இது ஒரு NCBH நிறுவன வெளியீடு. +918124949491 இந்த எண்ணில் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வாசகர்கள் இதனை வாசித்து நமது அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ள இந்நூலை இளந்தலைமுறையினருக்கு அறிமு...