*லைப்ஸ்டைல்*( life style)
*லைப்ஸ்டைல்* மாற்றங்கள் தான் வளர்ச்சி என்ற எண்ணப் போக்கு வலுபெற்று நேர்மைறை மாற்றங்களை நல்ல மாற்றங்கள் என்றும் எதிர்மறையான மாற்றங்களை விரும்பத்தகாத மாற்றங்களாகவும் பார்க்கும் சமூக மதிப்பீடுகள் நாகரீகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வளர்ச்சி சமூகத்தின் பலதரப்பினரிடையேயும் அவரவர் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப வேகங்கொள்கிறது அல்லது மாற்றங்காண்கிறது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களது சமூக ,பொருளாதார நிலைப்பாட்டை, தம் உண்மை நிலைக்கும் மேலாக காண்பித்துக் கொள்ளவே விரும்பி அதற்கேற்ற செயல்பாடுகளிலும் இறங்குகின்றனர்.இதனால் ஏற்படும் தனிமனித சிக்கல்கள் பின்னர் சமூகச் சிக்கல்களாகவும் உருமாறி விடுகிறது. குறிப்பாக சமூக அங்கீகாரத்திற்காக மனிதர்கள் போடும் வேடம் தான் அது. நடை ,உடை, பாவனைகள் ,என்று தங்களது வெளிச் செயல்பாடுகளில் போலியான மாற்றங்களை ஏற்படுத்திக் காட்டி வாழ்க்கை முறையை அவ்வப்போது மாற்றிக்கொள்ளும் முறையே புதிய லைப்ஸ்டைல் என்று எண்ணும் நடைமுறை எதார்த்தமானதாகி வருகிறது. ...