Posts

Showing posts from April, 2021

ஆக்சிஜன் பற்றா குறை

 *உயிரை நிறுத்தும் ஆக்சிஜன் பற்றா குறை*  ,*****************************              உலகை உருக்குலைய செய்து கொண்டிருக்கும் கோவிந்த் 19 என்னும் தொற்று முதலில் பாதிப்பது ஒருவரின் நுரையீரலை தான். இதனால் பலவீனமடையும் நுரையீரலால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை வழிமண்டலத்திலிருந்து பிரித்தெடுக்கும் பணியை செய்ய இயலாமல் திணருகின்றது. எனவே தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியான சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜன் சுவாசிக்க கொடுக்கப்படுகிறது.      இதற்காக இதுவரை இல்லாத அளவு மருத்துவமனைகளில் பெருகிவரும் கொரோனா தொற்றுடையோர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் பெருந்தேக்கம் நிலவுகிறது.மக்கள் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து மருத்துவர்களை துரிதப்படுத்தும் செயல்கள் கண்கலங்க செய்கின்றன.      இந்த ஆக்சிஜன் தயாரிப்பு என்பது வழிமண்டலத்தில் உள்ள மொத்த வாயுக் கலவையிலிருந்து தனித்தனியாக வாயுக்களைப் பிரித்தெடுக்கும் அறிவியல் தொழில் நுட்பம் மூலமாக நடைபெறுகிறது.           இந்நிலையில் மாநிலங்களில் தங்களது தயாரிக்கு...

*லைப்ஸ்டைல்*( life style)

Image
           *லைப்ஸ்டைல்*       மாற்றங்கள் தான் வளர்ச்சி என்ற எண்ணப் போக்கு வலுபெற்று நேர்மைறை மாற்றங்களை நல்ல மாற்றங்கள் என்றும் எதிர்மறையான மாற்றங்களை விரும்பத்தகாத மாற்றங்களாகவும் பார்க்கும் சமூக மதிப்பீடுகள் நாகரீகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வளர்ச்சி சமூகத்தின் பலதரப்பினரிடையேயும் அவரவர் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப வேகங்கொள்கிறது அல்லது மாற்றங்காண்கிறது.      இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களது சமூக ,பொருளாதார நிலைப்பாட்டை, தம் உண்மை நிலைக்கும் மேலாக காண்பித்துக் கொள்ளவே விரும்பி அதற்கேற்ற செயல்பாடுகளிலும் இறங்குகின்றனர்.இதனால் ஏற்படும் தனிமனித சிக்கல்கள் பின்னர் சமூகச் சிக்கல்களாகவும் உருமாறி விடுகிறது.        குறிப்பாக சமூக அங்கீகாரத்திற்காக மனிதர்கள் போடும் வேடம் தான் அது. நடை ,உடை, பாவனைகள் ,என்று தங்களது வெளிச் செயல்பாடுகளில் போலியான மாற்றங்களை ஏற்படுத்திக் காட்டி வாழ்க்கை முறையை அவ்வப்போது மாற்றிக்கொள்ளும் முறையே புதிய லைப்ஸ்டைல் என்று எண்ணும் நடைமுறை எதார்த்தமானதாகி வருகிறது.      ...

சுகாதார தினம்_ ஏப்ரல் 7.

       உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் ( WHO) மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஏழாம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1948ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வொரு ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றிலிருந்து  உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.          அதன்படி இவ்வாண்டு 2021 ,ஏப்ரல் 7ம் நாள் சுகாதார தினம் , *சிறந்த மற்றும் ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல்* என்னும் ஆழமான கருத்தை மையமாக வைத்து கொண்டாட உலகச் சுகாதார அமைப்பால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.      கொரோனா நோய்த்தொற்றால் முழு உலகமும் அல்லலுற்று முடங்கி கிடக்கும் இச்சூழலுக்கு மிகவும் அவசியமான இக்கருத்து மக்களின் கவனத்தில் சுகாதாரத்தின் அவசியத்தை உணர்த்தி நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.      உலகில் மனிதனின் ஆற்றல் அல்லது சக்தியே இன்றளவும் மனிதகுலத்தைத் தன்னிகரற்...

தேர்தல் விழிப்புணர்வு!

Image
இன்று( 06:04:2021)  நெல்லை டைம்ஸ் நாளிதழில் வெளியான எனது கட்டுரை...

*தேர்தல் அவசரம்*

          மக்களாட்சி முறையில் மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க  தேர்தல் என்பது மிக முக்கிய அம்சம்.உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில் பதினெட்டு வயது முழுமையடைந்த ஒவ்வொருவரும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் வாக்களிக்கும் உரிமைப் பெற்றிருக்கின்றனர்.          அரசியலில் தங்களுக்கான அதிகாரத்தை வெளிப்படுத்தும் ஒரு கருவியே மக்களின் வாக்குரிமை.         இவ்வுரிமை அரசியலாளர்களால் கட்டுப்படுத்தப்படவோ முடக்கப்படவோ கூடாது. தேர்தல்களில் வெற்றிபெறும் நோக்கோடு மக்களின் அறியாமை , வறுமை போன்றவற்றை சாதகமாகப் பயன்படுத்தி அவர்களது  வாக்குகளைச் சூரையாடுவது குற்றம். அவற்றைச் செய்வோரை நடுநிலையில் நின்று தடுக்கவும் தண்டிக்கவும் உரிமைப் பெற்றது  மக்களாட்சி முறையை  சிறப்பாக வடிவமைப்பதில் பெரும் பங்குவகிக்கும் தேர்தல் ஆணையம் .          ஒலி ,ஒளி ஊடகங்களால் இன்று மனிதச் சமூகம் மிகக் குறைந்த எல்லைகளுடைய  வட்டத்திற்குள் வந்து விட்டதால்,உலகின் ஒருமூலையில் ஏற்படும் சிறு அதிர்வலைகள் க...