ஆக்சிஜன் பற்றா குறை

 *உயிரை நிறுத்தும் ஆக்சிஜன் பற்றா குறை*
 ,*****************************      
       உலகை உருக்குலைய செய்து கொண்டிருக்கும் கோவிந்த் 19 என்னும் தொற்று முதலில் பாதிப்பது ஒருவரின் நுரையீரலை தான். இதனால் பலவீனமடையும் நுரையீரலால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை வழிமண்டலத்திலிருந்து பிரித்தெடுக்கும் பணியை செய்ய இயலாமல் திணருகின்றது.
எனவே தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியான சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜன் சுவாசிக்க கொடுக்கப்படுகிறது.
     இதற்காக இதுவரை இல்லாத அளவு மருத்துவமனைகளில் பெருகிவரும் கொரோனா தொற்றுடையோர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் பெருந்தேக்கம் நிலவுகிறது.மக்கள் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து மருத்துவர்களை துரிதப்படுத்தும் செயல்கள் கண்கலங்க செய்கின்றன.
     இந்த ஆக்சிஜன் தயாரிப்பு என்பது வழிமண்டலத்தில் உள்ள மொத்த வாயுக் கலவையிலிருந்து தனித்தனியாக வாயுக்களைப் பிரித்தெடுக்கும் அறிவியல் தொழில் நுட்பம் மூலமாக நடைபெறுகிறது. 
         இந்நிலையில் மாநிலங்களில் தங்களது தயாரிக்கும் திறனுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் ஆக்சிஜனை அம்மாநில அரசின் ஆலோசனைகளைப் பெறாமலே மத்திய அரசு பிற மாநிலத் தேவைகளுக்கு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது .
    இதற்கு மக்களின் நலவாழ்வு சார்ந்த பொறுப்புகளை அம்மாநிலங்களிடம் மேலோட்டமாக ஒப்படைத்து விட்டு அதை செயல்படுத்துவதற்கான அதிகாரம் மத்திய அரசிடமே இருப்பதே காரணமாக அறியப் படுகிறது.
     இத்தகைய அதிகார பலத்தில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை தமிழக அரசைக் கேட்காமலேயே தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ``ஆக்ஸிஜனைப் பிற மாநிலங்களுக்கு சப்ளை செய்தது தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை” எனத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.( செல்வபுவியரசன்- தி இந்து)
      எனவே விலையேறப் பெற்ற உயிரோடு போராடும் அரசியல் விளையாட்டுகளை நீக்கி, தேவை கருதி ஏற்ற வகையில் வளைந்து கொடுக்கும் சட்டத்தின் தன்மையையுமே இக்கொள்ளை நோயை விரட்டும் மிக முக்கிய வழிமுறைகளாகவும் மனிதாபமான அணுகுமுறையாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
_ Dr.த.ஜான்சிபால்ராஜ்.
( எழுத்தாளர், சமூக ஆர்வலர்)

Comments

Popular posts from this blog

*பெண் தலைமைத்துவ ஆளுமை* கிளாரிந்தா அம்மையார்.

*தேர்தல் அவசரம்*