சமூகச் சீரமைப்பில் சமயங்கள்
உலகில் வெகுசன வெகுசன முன்னணி சமயமான கிறித்தவம் மனிதகுலத்திற்கு நல்கிய ஆற்றல் மற்றும் பண்பாட்டுத் தாக்கங்கள் அளப்பரியது. ஆரம்பத்தில் மனிதனின் நம்பிக்கைகளையும் மனோபாவங்களையும் திடப்படுத்த உதவிய நெறிமுறைகளற்ற சமய நம்பிக்கைகள் பின்னர் மனிதன் தனது சாதி, சமூக, பொருளாதார செல்வாக்கை வெளிப்படுத்தும் மதிப்பீட்டு நிறுவனங்களாகி நின்றன. மதங்களின் கொள்கைகளும் பின்பற்றும் வழிமுறைகளும் அந்தந்த சமூகத்தளங்களின் ஆதிக்க நிலையிலிருந்தோரின் வடிவமைப்புகளுக்கேற்ப வளைந்து கொடுக்கத்தக்கதாகவே மாறிப் போயிருந்தன. இந்நிலைப்பாடு அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் வாழ்க்கை முறைகளைக் கடினமாக்கியது. காலப் போக்கில் சமயங்களில் ஏற்படுத்தப்பட்ட பக்தியின் வெளிப்பாட்டு முறைகளாக பல்வேறு சமயச் சடங்குகளினால் மக்கள் அல்லலுற்று புலம்பும் நிலையேற்பட்டது. இந்நிலைப்பாடு உலகளாவிய நிலையாகவே மனிதச் சமூகத்தில் இருந்தும்...