Posts

Showing posts with the label சுகாதாரம் ஒரு தேசத்தின் குறியீடு

சுகாதார தினம்_ ஏப்ரல் 7.

       உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் ( WHO) மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஏழாம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1948ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வொரு ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றிலிருந்து  உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.          அதன்படி இவ்வாண்டு 2021 ,ஏப்ரல் 7ம் நாள் சுகாதார தினம் , *சிறந்த மற்றும் ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல்* என்னும் ஆழமான கருத்தை மையமாக வைத்து கொண்டாட உலகச் சுகாதார அமைப்பால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.      கொரோனா நோய்த்தொற்றால் முழு உலகமும் அல்லலுற்று முடங்கி கிடக்கும் இச்சூழலுக்கு மிகவும் அவசியமான இக்கருத்து மக்களின் கவனத்தில் சுகாதாரத்தின் அவசியத்தை உணர்த்தி நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.      உலகில் மனிதனின் ஆற்றல் அல்லது சக்தியே இன்றளவும் மனிதகுலத்தைத் தன்னிகரற்...