சரித்திர விடியல்...!
சரித்திர விடியல்..! மனிதக்குல சரித்திரத்தில் கி.பி முதலாம் நூற்றாண்டு தான் உலகின் புது விடியல் என்றால் அது மிகையாகாது. இயேசு கிறிஸ்து என்ற இறைமகனின் பிறப்பு அதுவரை இருந்துவந்த மனித நம்பிக்கைகளையும் மனப்பான்மைகளையும் புரட்டிப் போட்டது! இஸ்ரவேல் தேசத்தின் யூத குலத்தவரான இயேசு , தனது முப்பதாவது வயது முதல் இறைப்போதனைகளில் ஈடுபட்டார். அவரது சமயப் போதனைகள் அனைத்தும் மக்கள் மனத்தைத் தொடுவதாகவும் புரட்சிகரமான முற்போக்கு சிந்தனையுடையதாகவும் இருந்தன.இயேசுவின் கொள்கைகள் யூதர்களின் சமயக் கொள்கைகளுக்கு முரண்பாடானதாக மக்களால் அறியப்பட்டது.ஆனாலும் ஏழை எளியோரை அரவணைக்கும் அன்பின் சாரமாகமைந்திருந்த அவரது ஆன்மீக உரையைக் கேட்கவும் பின்பற்றவும் ஆயிரகணக்கில் மக்கள் திரண்டு சென்றனர். அவர்களுள் பல்வேறு நோயுற்றோரை தனது இறையாற்றலால் அதிசயிக்கத்தக்கதாக சுகப்படுத்தினார்; இறந்து போனவர்களையும் உயிரோடு எழுப்பியிருக்கிறார் என்று அவரது சீடர்களால் விவிலியத்தில் புதிய ஏற்பாட்டு பகுதியின் நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...