சாதீய சமத்துவாக்கத்தில் சமயப் பங்களிப்பு!
சாதி,சமயச் சடங்குகள் ,மரபுசார் நம்பிக்கைகள், ,கலாச்சாரம் என்ற பெயரில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டு சமூகத்தில் ஆங்காங்கே ஒருசிலர் தங்களை மேல்மட்டத்தினராக காண்பிக்கும் ஒரே நோக்கத்தில் அடுத்தடுத்த அடைமைமுறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே வாழ்கையைத் தக்கவைத்துக் கொண்டிருந்த சமூகத் தீமை இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையின் ஆரம்ப காலகட்டம் மிகக் கொடூரமானதாக வரலாற்றுப் பின்புலங்கள் சுட்டி நிற்கின்றன. அறியாமைகளின் அளவைப்பொறுத்தே ஒரு நாடுஅல்லது சமூகம் புறத்தையார்களின் கொடுக்குப் பிடிக்கு இலக்காகும் தன்மையை தெளிவாக வெளிப்படுத்தும். இயற்கை வளமும் சிறந்த கலாச்சார மரபுக்களையும் தாங்கி நின்ற நமது தேசமும் அதன் சிறப்புகளை மக்கள் மற( றை)க்கும் அளவு அறியாமை திரைகளுக்குள் மூழ்கிக்கிடந்தது. பல இனத்தவரும் மதத்தினரும் ஒன்றிணைந்து வாழ்ந்த கூட்டுச் சமூகத்தில் சொந்த நாட்டினரே ஒருவரையொருவர் சாதி சமய பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த அடிமைத் தனங்களைப் போட்டிப்போட்டு திட்டமிட்ட ஆதிக்...