Posts

Showing posts from February, 2021

சரித்திர விடியல்...!

சரித்திர விடியல்..!          மனிதக்குல சரித்திரத்தில் கி.பி முதலாம் நூற்றாண்டு தான் உலகின் புது விடியல் என்றால் அது மிகையாகாது. இயேசு கிறிஸ்து என்ற இறைமகனின் பிறப்பு அதுவரை இருந்துவந்த மனித நம்பிக்கைகளையும் மனப்பான்மைகளையும் புரட்டிப் போட்டது!         இஸ்ரவேல் தேசத்தின் யூத குலத்தவரான இயேசு ,  தனது முப்பதாவது வயது முதல் இறைப்போதனைகளில் ஈடுபட்டார். அவரது சமயப் போதனைகள் அனைத்தும் மக்கள் மனத்தைத் தொடுவதாகவும் புரட்சிகரமான முற்போக்கு சிந்தனையுடையதாகவும் இருந்தன.இயேசுவின் கொள்கைகள் யூதர்களின் சமயக் கொள்கைகளுக்கு முரண்பாடானதாக மக்களால் அறியப்பட்டது.ஆனாலும் ஏழை எளியோரை அரவணைக்கும் அன்பின் சாரமாகமைந்திருந்த அவரது ஆன்மீக உரையைக்  கேட்கவும் பின்பற்றவும் ஆயிரகணக்கில் மக்கள் திரண்டு  சென்றனர். அவர்களுள் பல்வேறு நோயுற்றோரை தனது  இறையாற்றலால் அதிசயிக்கத்தக்கதாக சுகப்படுத்தினார்; இறந்து போனவர்களையும் உயிரோடு எழுப்பியிருக்கிறார் என்று அவரது சீடர்களால் விவிலியத்தில் புதிய ஏற்பாட்டு பகுதியின் நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

*இந்தியப் பெண்ணின விடுதலைப் போரில் ஏமிக்கார்மைக்கேல்*

இந்தியப் பெண் விடுதலைக்காகப் பாடுபட்டவர்களுள் அயர்லாந்து நாட்டுப் பெண்ணான ஏமிக்கார்மைக்கேல்( கிபி 1867_ 1951)முதன்மையானவர்.       19ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவிற்குள் கிறிஸ்தவச்  சமயப் பணிக்கென்று வந்த இவரை இச்சமூகம் தன்னைச் சுத்திகரிக்கும் பணிகளில் பயன்படுத்திக் கொண்டது. கி.பி. 1895-ம் ஆண்டு இந்தியா வந்து சேர்ந்த இவர் தமிழகத்தில் தனது பணியைச் செய்வதென்ற முடிவில் திருநெல்வேலி மாவட்டத்தில் பண்ணைவிளை என்ற ஊரில் ஏற்கெனவே அங்கு கிறிஸ்தவச்  சமயப்பணியினைச்  செய்து கொண்டிருந்த மிஷனரி *உவாக்கர்* தம்பதியினரோடு இணைந்து தமது சமயப்பணியினைப்  பெண்களிடையே மேற்கொண்டார்.       சுற்றுவட்டார கிராமங்களில் தாம் கொணர்ந்த சமய நம்பிக்கைகளை அளிக்க விளைந்த போது தான், இச்சமூகத்துப் பெண்களின் அவலநிலைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. மிகவும் மனமுடைந்த அவர், முதலில் அவர்களுக்கு இச்சமூகத்தின் கோரப்பிடியில் இருந்து தான் விடுதலை  தேவை என்பதை உணர்ந்தார். தாம் வசித்து வந்த  பகுதிகளைச் சுற்றின கிராமங்களின் தெருக்களில் சொந்தக் குடும்பங்கள...

*அவள் தான் வேண்டும்!*

டேய் நித்தீஸ் ...முழுசா முப்பது வயசு முடிஞ்சாச்சு....இன்னும் இப்படியே இருந்தா எப்படிடா...??_  நீர் கோதிய விழிகளோடு அவன் நாடியை பிடித்துத் தன் பக்கமாய்த் திருப்பினாள்  தாய் ஸ்டெல்லா. ஏறிட்டுப்  பாராமலே இமைகளைக் கவிழ்த்தப்படி ,உதட்டில் வெற்றுப் புன்னகையைக் காட்டினான் ... ! அதனூடே அவன்  இதயம் கனத்துத் துடிப்பதை உணர முடிந்தது அவளால்...! ஏண்டா...உனக்கு நான் எத்தனை முறை சொல்லிட்டேன்....எவளையாவது மனசில வச்சிரிக்கியா....? சொல்லுடா....?_ தோளில் கை வைத்து உலுக்கினாள். அது....வந்து....அப்படில்லாம் இல்லமா...._   ஏதோ இருக்குமா என்று கேட்டது அவ்வார்த்தைகள் அவளுக்கு. இங்கப் பாருடா.. ...முப்பத்தைந்து  வருசத்திற்கு முன்பே உங்கப்பாவும் நானும் சாதியையோ மதத்தையோ பார்க்காம காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.... யாருக்கும் அது பிடிக்கல . எங்க அம்மா தற்கொலை பண்ணிக்குவேன்னு கத்தினாங்க.......! அவுங்க அப்பா ...அதான் என் மாமனார் என்னை நேரிலேயே வந்து கொன்னுடுவேன்னு ரொம்பவே மெரட்டிட்ட்டுப் போனாரு ....!  அதைப் பற்றியெல்லாம் நாங்க கவலையே படல.... யாருக்கும் தெரியாம சென்னைக்கு வந...

எனது காதல் தினம்..!!

*எனது காதலர் தினம்*🌹🌹💃 இன்று உலகக் காதலர்கள் தினம்...!        மகனுக்கு பத்தொன்பது மகளுக்கு பதினாறு வயது மெல்ல நடந்து கொண்டிருக்க...       திருமணமான ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளைக்  கொஞ்சம் விசேஷமாக நாங்களும் அநுசரிப்பதுண்டு!     ஆனால் கடந்த சில வருடங்களாக  இந்தக் காதலர் தினத்தை அதிகம் கண்டு கொள்வதில்லை..!!      வயதாகிவிட்டதான நினப்பிலெல்லாம் இல்லை...! ஆனாலும் ஏதோ ஒருவித நெறுடல்..!      அந்த பிப்ரவரி 14 ல் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் ஏதும் மாற்றம் தெரிகிறதா? நடை, உடை பாவனைகளில்....?? இதை கவனிப்பதே அன்றைய லேசான படபடப்பு எனக்கு....! பிள்ளைகள் படிக்க வேண்டிய வயதில் காதல் வயப்பட்டிருப்பார்களோ என்ற லேசான பயம்தானது!   பிறகு வேறெங்கிருந்து காதலர்தின லவ் மூடுக்கு நாம் போவது....!!?? சலிப்புடன் எனக்குள் நானே பேசிக் கொண்டே அசைபோட்டது   கடந்த ஆண்டின் எங்களது  காதலர் தினத்தை!    அன்றைய மாலையில் அழகான ஒரு புடவையோடு மயக்கும் மல்லிகையும் சேர்த்த ஒரு கைப்பையை நீட்டி...*   ...