சமூக மேம்பாட்டில் உயிர்களின் விரயம்!!
மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் தமது சமூக மேம்பாட்டிற்கான போராட்டங்களில் வெற்றிக்கான வழிமுறைகளாகப் பெரும்பாலும் மனப்பான்மைகளில் பலவீனமானவைகளே அடக்குமுறைகளை மேற்கொள்கின்றன.
ஆயினும் அன்பின் அடிப்படையில் வீரியமிகு நிலையான நேர்நிலை பாதிப்புகளை மேற்கொண்டோர்கள் தான் சாதித்திருக்கின்றனர் என்பதே வரலாற்றின் வழிநெடுகே காணமுடிகிறது!
அதிலும் தமது கொள்கைக்களுக்காக மீட்டெடுக்கவியலா தம் உயிரையே மேம்பட்ட அவ்வெற்றிக்காக செலவிடுவதுதான் சீரணிக்கவியலா தன்மையோடு மனித மனங்களில் ஆழப்பதிந்து தம் கருத்தை உறுதிபடுத்தும் ஆயுதங்களாகின்றன.
அவ்வழியில் கிறித்தவத்தின் துவக்கமும் முடிவில்லா தொடர்ச்சியும் அன்பிற்கே உரிய அடிப்படை பரிமாணங்களால் தான் வென்று நிற்கின்றன என்பது உலகளாவிய ஏற்பு நிலை!
உலகில் மனிதச் சமூகத்தில் அதன் முன்னேற்றப் பாதைகளில் நடைபெற்றுள்ள புரட்சிப் போராட்டங்களும் நியாயமான விடுதலை வேட்கைகளும் கூட மனித உயிர்களை விழுங்கி கொண்டுதான் உயிர்ப்படைந்திருக்கின்றன.
இந்நிலைப்பாட்டில் தம்மையே இழக்கும் நபர்கள், தாம் கொண்ட கொள்கைகளை எதிர்ப்போரால் கொடூரமாக கொல்லப்படுவது அக்கொள்கைக்கான உறுதிப்பாட்டை உணர்த்தும் *இரத்த சாட்சிகளாக* கிறித்தவ வரலாற்றினால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அவ்விதத்தில் உலகின் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநிறுத்தும் நோக்கோடு போதித்து , அர்த்தமற்ற சடங்காசாரமான மரபுகளை எதிர்த்தும் அவற்றை வழக்கொழித்தும் எதார்த்தமான உலக வாழ்க்கை முறையை ஏற்படுத்திட தேவையான ஆரம்பகட்ட செயற்பாடுகளைக் கட்டமைத்த யூத மரபினரான
இயேசுவை அவர்தம் புரட்சியை விரும்பாத அன்றைய ஆட்சியாளர்கள் மற்றும் அவர் சார்ந்திருந்த சமயப் போதகர்களும் தோல்வி பயத்தினால் கொலை செய்துவிட திட்டமிட்டு கொடூரமான அக்கொலையை நிறைவேற்றினர்.
அந்தந்த கால கட்டங்களில் மனிதகுல மேம்பாட்டில் ஏற்படுத்தப்பட்ட சமூக ,பொருளாதார, சமய மாற்றங்களுக்கு எதிரான அதிதீவிரமான எதிர்ப்புகளை வரலாற்றின் பக்கங்கள் செம்மை வண்ணம் பூசி பதித்திருக்கின்றன. பல இன்னுயிர்கள் அதற்காக தாராளமாக செலவு செய்யவும் பட்டிருக்கின்றன.
கிறித்தவமும் அதன் வளர்ச்சிப் பாதைகளில் எதிர்ப்பாளர்களால் பல உயிர்பலிகளை எதிர்க்கொண்டிருக்கிறது. அன்பையும் சமாதானத்தையும் முன்னிருத்திய இச்சமயக் கொள்கைகளை ஒழிக்கப் பயன்படுத்திய கொடூரமான வழிமுறை , அதன் உருவாக்கிகளையும் அதனோடு இணைந்து கொள்ள முற்பட்டோரையும் அவற்றை விட்டுவிட வற்புறுத்தி உயிரோடு வதைத்து உயிர் உடலைவிட்டுப் பிரியும்வரைச் சிதைத்து அழித்திருக்கின்றனர்..!
ஆனாலும் பெரும்பாலானோர் தம் இறுதி மூச்சுவரை இயேசு கிறித்துவின் கொள்கைகளுக்கு நான்( நாங்கள்) சாட்சிகள் என்றே முழக்கமிட்டு உலகக் கிறித்தவ திருச்சபையின் அஸ்திபார கற்களாய் இன்றும் நின்று கொண்டிருக்கின்றனர்.
விவிலியத்தின் புதிய ஏற்பாட்டுப் பகுதி கிறித்தவத்தின் துவக்கத்தையும் அதன் தொடர்ச்சியையும் தெளிவுபடுத்துகிறது.கிறிஸ்துவாக ஏற்கப்பட்ட இயேசுவின் பிறப்பைத் தொடர்ந்து முதல் மூன்று நூற்றாண்டுகளும் இந்த எதிர்ப்பலைகளில் சிக்கி சின்னாபின்னமாகி உயிர்நீத்த கொள்கைவாதிகளான கிறித்தவர்கள் ஏராளம். அவ்வலையின் மும்முரமான இறைச்சல் இன்றுவரை உலகின் ஏதாவதொரு மூலையில் இருந்தபடி அதே வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறது!
தொடக்கக் கால கிறித்தவத்தின் அடித்தள நிலைப்பாட்டில் ஏசுவின் சீடர்கள் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். அவர்களுள் சீமோன் என்ற பேதுருவின் உறுதியான நம்பிக்கையோடான பிரச்சார திறனால் மக்கள் ஆயிரக் கணக்கில் கிறித்தவத்தை ஏற்றனர். இதனால் ரோமப் பேரரசு அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தது. கி.பி 61 ஆம் நூற்றாண்டில் அவரோடு ஒருமித்து கிறித்தவச் சமயப் பணியை மேற்கொண்ட அவரது மனைவியையும் பேதுருவின் கண்ணெதிரே சிலுவையிலறைந்து கொன்றனர். அந்த கொடுங்காட்சியை அவரை பார்க்கும்படியும் வற்புறுத்தியுள்ளனர். .!( Eusebius, Ecclesiastical History).
அத்தோடு அச்சீடனையும் சிலுவையிலறைந்தே கொன்றனர். அவரை தான் *கிறித்தவத் திருச்சபையின் முதல் பேராயர்* என்று அச்சமய வரலாறு வர்ணிக்கின்றது. அவரது இம்மரணம் மேலும் கிறித்தவத்தின் வளர்ச்சி வேகத்தைப் பன்மடங்கு அதிகரித்ததேயன்றி சாவுபயத்தால் குன்றி போகவில்லை என்பதே வரலாற்றுண்மை.
ஆத்துமா அழிவில்லாதது போல ஆத்மீகமான கொள்கைகளும் நியாயமான சமூக மாற்றங்களும் அழிவில்லாத தன்மையுடையனவாக நிலைத்து வளர்ந்தோங்குகின்றன! கிறித்தவமும் அதற்கு விதிவிலக்கானதல்ல!!
_ Dr. ஜான்சிபால்ராஜ்
வன்னியன்குடியிருப்பு.
சிறப்பு சகோ..
ReplyDeleteவாழ்த்துக்கள் 💐
மகிழ்ச்சி..... மிகவும் நன்றி சகோ
ReplyDelete