*பெண் தலைமைத்துவ ஆளுமை* கிளாரிந்தா அம்மையார்.
பதினெட்டாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடியில் டச்சுக்காரர்கள் எழுப்பிய டச்சு ஆலயத்தைத் தவிர்த்து திருநெல்வேலியில் தோன்றிய முதல் சீர்திருத்த ( Protestant) கிறித்தவ ஆலயத்தைக் கட்டிய கிளாரிந்தா என்ற பெண்ணின் தலைமைத்துவப் பண்பு இன்றும் நம்மால் கிரகிக்க இயலாத ஆளுமைத் தன்மை கொண்டதாகவே உயர்ந்து நிற்கிறது! இந்தியாவில் பெண் தலைமைத்துவம் என்பது ஆண் தலைமைத்துவத்திற்கு இணையாக குடும்பம், சமூகம்,பொருளாதாரம், அரசியல் என்று எந்த தளத்திலும் இன்றுவரை முழுமையாக ஏற்கப்படாத நிலையில் ,18 ஆம் நூற்றாண்டில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை கற்பனையிலும் நினைத்துப் பார்த்து எழுத்தில் அவற்றை விவரித்துவிடுவது எளிதல்ல...! பெண்ணினம் ஆணினத்தின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஓர் உடைமையாக மட்டுமே பார்க்கப்பட்டதோடு எவ்விதத்திலும் ஆணுக்கிணையானவளாக யாராலும் உணரப்பட்டுவிடக் கூடாதென்ற முன்னெச்சரிக்கையோடும் பெண் தன்னை உணர்ந்து தனது திறமைகளை, தனித்தன்மைகளை வெளிப...
Comments
Post a Comment