சரித்திர விடியல்...!
சரித்திர விடியல்..!
மனிதக்குல சரித்திரத்தில் கி.பி முதலாம் நூற்றாண்டு தான் உலகின் புது விடியல் என்றால் அது மிகையாகாது. இயேசு கிறிஸ்து என்ற இறைமகனின் பிறப்பு அதுவரை இருந்துவந்த மனித நம்பிக்கைகளையும் மனப்பான்மைகளையும் புரட்டிப் போட்டது!
இஸ்ரவேல் தேசத்தின் யூத குலத்தவரான இயேசு , தனது முப்பதாவது வயது முதல் இறைப்போதனைகளில் ஈடுபட்டார். அவரது சமயப் போதனைகள் அனைத்தும் மக்கள் மனத்தைத் தொடுவதாகவும் புரட்சிகரமான முற்போக்கு சிந்தனையுடையதாகவும் இருந்தன.இயேசுவின் கொள்கைகள் யூதர்களின் சமயக் கொள்கைகளுக்கு முரண்பாடானதாக மக்களால் அறியப்பட்டது.ஆனாலும் ஏழை எளியோரை அரவணைக்கும் அன்பின் சாரமாகமைந்திருந்த அவரது ஆன்மீக உரையைக் கேட்கவும் பின்பற்றவும் ஆயிரகணக்கில் மக்கள் திரண்டு சென்றனர். அவர்களுள் பல்வேறு நோயுற்றோரை தனது
இறையாற்றலால் அதிசயிக்கத்தக்கதாக சுகப்படுத்தினார்; இறந்து போனவர்களையும் உயிரோடு எழுப்பியிருக்கிறார் என்று அவரது சீடர்களால் விவிலியத்தில் புதிய ஏற்பாட்டு பகுதியின் நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனெதிரொலியாக நாளுக்குநாள் இயேசுவைப் பின்பற்றும் கூட்டம் பெருகிக் கொண்டே போனது.
அப்போது உரோமப் பேராட்சியின் கீழிருந்த யூதர்கள் இயேசுவைப் பின்பற்றும் வெகுஜன கூட்டத்தால் தங்களது ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் எழலாம் என்ற எண்ணப் பெருக்கால் அவரை சிலுவை மரத்தில் அறைந்து கொலை செய்தனர்.அத்தோடு இப்புதிய மார்க்கம் முடிவுற்றது என்று கருதிய உரோம அரசியலாளர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.!
சிலுவையில் கொல்லப்பட்ட இயேசு மூன்றாவது நாள் உயிருடன் எழுந்து தனது சீடர்களுக்கும் வேறு சிலருக்கும் தாம் உயிரோடு இருப்பதை நிரூபித்ததாக மக்களுக்குள் பரபரப்பான செய்திகள் காட்டுத்தீயாய் பரவின.
யூதர்களுக்குள் ஏற்பட்ட இச்சமயத்தின் மாற்றுமுகம் வினோதமானதாக உரோமானியர்களால் உணரப்பட்டதோடு பலவித அரசியல் அச்சங்களையும் தோற்றுவித்தது. முழு உலகையும் ஆட்சிசெய்யும் புதிய விண்ணரசு இயேசுகிறித்துவின்( மீட்பர், மெசியா) மூலம் வரும் என்ற கிறித்தவர்களின் அசைக்க முடியா நம்பிக்கையும் அதனால் அதைப் பின்பற்றுவோர்கள் தங்கள் இன்னுயிரையும் துச்சமென மதித்து அரசாங்க சட்டங்களையும் மீறி நடந்த விதங்களும் ரோமையர்களின் ஆளுகையின் அடிவேர்களை அசைத்தன.
இதனை அடக்க கிறித்தவ கொள்கைகளான, மன்னனேயாகிலும் அவர்களை கடவுளுக்கிணையாக வணங்க மாட்டோம்...! உருவாக்கப்பட்ட உருவச் சிலைகளை வழிபட முடியாது என்பனவற்றைக் கடுமையாக எதிர்த்தனர். இவ்விரு கொள்கைகளும் உரோமர்களால் கிறித்தவர்களுக்கு எதிரான பெருங்குற்றங்களாக சுமத்தப்பட்டன. மீறியவர்களைப் பிடித்து சித்திரவதைச் செய்து கொன்றனர்.
குறிப்பாக கி.பி 64 ல் உரோமப் பேரரசன் நீரோடொமிஷன் ஆட்சிக்காலத்தில் தனது ஆட்சியின் கீழிருந்த நாடுகளெங்குமிருந்த கிறித்தவர்களை மிகக் கொடூரமாக கொன்று குவித்தான். இவனது ஆட்சிக்காலத்தில் தான் ஏராளமானோர் கிறித்தவ மார்க்கத்தை ஏற்க காரணமாயிருந்த பவுல் என்ற மறுபெயர் கொண்ட சவுல் என்பவர் சிரைச்சேதம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்( கி.பி 67).
கிறித்தவத்தை ஏற்றோரை ஈவு இரக்கமின்றி உடலை பிய்த்தெறிதல் , உயிருடன், தோலை உரித்தல், பழுத்த இரும்புத் தகட்டை உடலோடு வைத்தெரித்தல்,கழுமரத்தில் ஏற்றுதல், எண்ணெய் ஊற்றி மரத்தோடு கட்டிவைத்து எரித்தல் போன்ற சித்திரவதைகளைச் செய்து கொன்றான். காண்போருக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி கிருத்துவத்தின் பரவலைத் தடுக்க வேண்டி, கொன்ற உடல்களை வீதிகளில்
பொதுமக்களின் பார்வையில் தூக்கியெறிந்தான்...!
ரோம் நகரைப் புதியவிதமாக திருத்தியமைக்க விரும்பிய அவன் தானே தனது சகாக்கள் மூலம் அந்நகரை தீக்கிரையாக்கி அந்தப் பழியை கிறித்தவர்கள் மேல் போட்டு பொதுமக்களுக்கு கிறித்தவத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தி,
அதனிடையே ஒழிந்தபடி குளிர்காய்ந்தான்.
ஆனாலும் ரோமிலும் கிரேக்கத்திலும் கூட அதிவேகமாக கிறித்தவர்களின் எண்ணிக்கைப் பெருகிக் கொண்டே சென்றது!
இயேசுவிற்குப் பிறகு அவரது சீடர்களுள் முதல் பலியான ஸ்தேவான் ( கி.பி 35) முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டுவரை கிறித்தவத்திற்காக கொல்லப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் என்று வரலாற்றாசிரியர்கள் தெளிவுப் படுத்துகின்றனர்.
கி.பி 313 _ ல் முதலாம் காண்ஸ்ட்ண்டைன் ( Constantine) என்ற உரோம அரசன் தான் கிறித்தவ சமயத்தை உரோம அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சமயமாக அறிவித்தான்.இதற்கும் கிறித்தவர்களுக்கெதிரான அடக்குமுறைகளும் கொடுங்கோலாட்சியும் தோல்வியுற்று கட்டுப்படுத்த முடியாத அளவில் கிறித்தவர்களின் எண்ணிக்கைப் பெருக்கமடைந்ததே காரணமாக இருந்தது. அரசியல் நோக்கோடு எடுக்கப்பட்ட உரோம சாம்ராஜ்ஜியத்தின் இம்முடிவு கிறித்தவர்களின் வேதனைகளுக்கு ஓரளவு முடிவு கட்டியது. இதன்பிறகே மக்களின் அனைத்து தரப்பினரும் கிறித்தவத்தை ஏற்கும் நிலை உண்டானது.
யூத சமயத்திலிருந்த எழுத்தளவிலான பழைமையை அறிவார்ந்த நிலையில் இறைவழிபாடு முறைகளைப் பின்பற்றும் கிறித்தவ மார்க்கத்தைப் பின்பற்றுவதை மக்கள் நாகரீகமாக கருதும் காலம் கனிந்தது.
இயேசு பிறந்த காலம் முதல் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு காலங்கள் கிறித்தவ சரித்திரத்தின் இருண்ட காலமாக தெரிந்தாலும் இன்று உலகில் கிறித்தவம் அறியப்படாத நாடுகளே இல்லை என்னும் அளவு அதன் வளர்ச்சிக்கு மூலக் காரணம் அந்த ஆரம்பகால இருளின் அடர்வே அடித்தளம் என்றால் மிகையாகாது..!
Dr. ஜான்சிபால்ராஜ்,
வன்னியன்குடியிருப்பு.
அருமை
ReplyDeleteமகிழ்ச்சி... மிக்க நன்றி சகோ
Deleteஇயேசு கொல்லப்பட்ட பிறகு நடந்த நிகழ்வுகளை , அறியாத செய்திகளை 'சரித்திர விடியல்' எனும் தலைப்பில் சுவடாக பதிவு செய்த பாங்கு மிக அருமையாக உள்ளது
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சகோ...தங்களது ஆழமான கருத்திக்களுக்கு
ReplyDeleteஅருமையான ஆளமானக் கருத்துக்கள். தொடர வாழ்த்துகிறேன் 💐💐💐
ReplyDelete#ஆழமான
Deleteமிக்க மகிழ்ச்சி.... நன்றி
Deleteஇப்படியும் காதலர் தினம் கொண்டாடலாம்.எத்தனைவயதானாலும் காதல் மட்டும் குறைவதில்லை என்ற எண்ணத்தை உணரவைத்தது.
ReplyDeleteஅருமையான பதிவு.
மேலும் முயற்சி தொடர் வாழ்த்துகள்.